Thursday, October 18, 2012

ராகு கிரகம் - பயோடேட்டா

ராகு கிரகம் - பயோடேட்டா


நிறம் - கருப்பு
குணம் - குரூரம்
மலர் - மந்தாரை
ரத்தினம் - கோமேதகம்
உருவம் - அசுரத்தலை, பாம்பு உடல்
கிரக லிங்கம் - அலி
வடிவம் - நெடியர்
பாஷை - அன்னிய பாஷை
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் காலம் - 1 1/2 வருஷம்
வஸ்திரம் - கருப்பு வஸ்திரம்
க்ஷேத்திரம் - ஸ்ரீகாளஹஸ்தி, திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம், இரட்டைத் திருப்பதி மற்றும் புற்றுக் கோவில்கள்
ஆசனம் - கொடி

ஸமித்து (ஹோமக் குச்சி) - அருகம்புல்
நைவேத்தியம் -  உளுந்தன்னம் (உப்பு அல்லது இனிப்பு)
தேசம் - பர்ப்பராதேசம்
தேவதை - பத்திரகாளி, துர்க்கை, ம்ருத்யு
ப்ரத்யதி தேவதை - ஸர்ப்பம்
திசை - தென்மேற்கு
வடிவம் - முச்சில்(முறம்)
வாகனம் - ஆடு சில நேரங்களில் சிங்கம் என்பர்.
தானியம் - உளுந்து
உலோகம் - கருங்கல்
காலம் - ராகுகாலம் (அட்டவனையை கீழே கொடுத்திருக்கிறோம்)
கிழமை - சனிக்கிழமை (கவனித்துக் கொள்க - பின்னால் விளக்கப்படும்)
பிணி - பித்தம்(கவனித்துக் கொள்க - பின்னால் விளக்கப்படும்)
சுவை  - புளிப்பு(கவனித்துக் கொள்க - பின்னால் விளக்கப்படும்)
நட்பு கிரகங்கள் - சனி, சுக்கிரன்(கவனித்துக் கொள்க - பின்னால் விளக்கப்படும்)
பகை கிரகங்கள் - சூரியன், தேய்பிறை சந்திரன், செவ்வாய்
சம கிரகங்கள் - வளர்பிறை சந்திரன், புதன், குரு
காரகம் - பிதாமகர் (பாட்டனார் - அப்பாவின் அப்பா)
தேக உறுப்பு - முழங்கால்
நக்ஷத்திரங்கள் - ஆருத்ரா(திருவாதிரை), ஸ்வாதி, ஸதயம்
திசை வருடம் - 18 ஆண்டுகள்
மனைவி - சிம்ஹிகை
உபகிரகம் - வியதீபாதன்

தோத்திரங்கள்

ராகு த்யான ஸ்லோகம்

அர்த்த காயம் மகாவீர்யம் சந்த்ராதித்ய விமர்தனம்!
ஸிம்ஹிகா கர்ப்பஸம்பூதம் தம் ராகும் ப்ரணமாம் யஹம்!!

ராகு காயத்ரி

ஓம் நகத்வஜாய வித்மஹே பத்மஹஸ்தாய தீமஹி தந்நோ ராகுப் ப்ரசோதயாத்!

ராகு துதி

வாகுசேர் நெடுமால் முன்னம் வானவர்க்கு அமுதம் ஈயப் 
போகும் அக்காலம் உந்தன் புனர்ப்பினால் சிரமேயற்று
பாகுசேர் மொழியாள் பங்கன்பரன் கையில் மீண்டும் பெற்ற
ராகுவே உனைத் துதிப்பேஎன் ரட்சிப்பாய் ரட்சிப்பாயே.

No comments:

Post a Comment